இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள்

உலகம் மற்றும் இந்திய அளவில் இணையதள தேடலில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-05 09:50 GMT
பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் பொழுது போக்குக்காக தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி தேடுபவர்கள் பலர் உள்ளனர். இதில் தான் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கிறது ஆபத்து. இப்படி அதிகமாக தேடப்படும் பிரபலங்களின் புகைப்படங்களை வைத்து சில ஹாக்கர்கள் வைரஸ் உள்ள இணையதளங்களுக்கு பார்வையாளர்கள் வரவைத்து எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எந்த பிரபலத்தின் பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை மெக்கபே நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில்

 முதல் பத்து நட்சத்திரங்கள் ரியாலிட்டி டி.வி நட்சத்திரம், கிறிஸ்டின் கவால்லாரி,நடிகை ரூபி ரோஸ், மரியன் கோட்டிலார்ட்,லிண்டா கார்ட்டர்,ரோஸ் பைரன்,டெப்ரா மெஸ்ஸிங், ரியாலிட்டி டி.வி ஸ்டார் கர்ட்னி கர்தாஷியன்,நடிகை ஆம்பர் கியர்ட்,கெல்லி ரிபா,பிராட் வில்லியம் ஹெக்கே ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் இந்தியாவில் பிரபல நடிகை இலியானா தான் முதலிடத்தில் உள்ளார்.



இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளதால் அவர் பெயரைத்தான் மக்கள் அதிகம் இணையத்தில் தேடியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த அடுத்த இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியல் இதோ.

இலியானா,தபு,கீர்த்தி சனோன்,அக்‌ஷய்குமார்,தீபிகா படுகோனே,ரிஷிகபூர்,பிரியங்கா சோப்ரா,பிரித்தி ஜிந்தா,பிரினீத்தி சோப்ரா,கோவிந்தா

மேலும் செய்திகள்