‘‘ரசிகர்களுக்கு பிடித்த வி‌ஷயங்கள்’’ - டைரக்டர் பாக்யராஜ்

அங்காடி தெரு மகேஷ், ஷாலு ஜோடியாக நடித்துள்ள படம் என் காதலி சீன் போடுறா. ராம்சேவா இயக்கி உள்ளார். ஜோசப் பேபி தயாரித்துள்ளார்.

Update: 2018-12-29 22:45 GMT
'என் காதலி சீன் போடுறா'  படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–

இயக்குனர் நிறைய மனக்குமுறலை இங்கு வெளியிட்டார். தயாரிப்பாளர்களுடன் மோதல் ஏற்படுவதற்கு இடையில் உள்ள சிலர் வேலை செய்வார்கள். டைரக்டர் சரியாக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஏழை-பணக்காரன் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதுதான் எனது முதல் படம். படப்பிடிப்பில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா போன்றோரை பார்த்து வியந்தேன். அதன்பிறகுதான் 16 வயதினிலே படத்தில் பணியாற்றினேன். ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் இந்த படத்தில் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். வித்தியாசமாக செய்தால்தான் இந்த காலத்தில் நிலைக்க முடியும்.

 ‘இன்றுபோய் நாளை வா’ கதை விவாதத்தில் உதவி இயக்குனர்கள் ஆளாளுக்கு காட்சிகளை சொன்னார்கள். ஏன் என்றால் அது சைட் அடிக்கும் கதை. அதுபோல் இந்த படத்தின் தலைப்பும் இருக்கிறது. படங்களை விளம்பரப் படுத்தினால்தான் ஓடும் என்கின்றனர். சில படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. ரசிகர்களுக்கு பிடித்த வி‌ஷயங்கள் இருந்தால் போதும். படம் ஓடும்.’’

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

தயாரிப்பாளர்கள் டி.சிவா, தேனப்பன், இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோரும் பேசினார்கள்.

மேலும் செய்திகள்