கணித மேதை வேடத்தில் வித்யா பாலன்

மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர் சகுந்தலா தேவி. பெங்களூரை சேர்ந்த இவர் சிறுவயதில் இருந்தே சுயமாக கணக்கு பாடங்களை கற்றார்.

Update: 2019-02-05 23:00 GMT
சிக்கலான கணக்குகளுக்கும் சில நொடிகளில் தீர்வு சொன்னார். இவரது திறமை உலகம் முழுவதும் பரவியது. கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். 2013-ஆம் ஆண்டு தனது 83-வது வயதில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் சகுந்தலா தேவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க ‘தங்கல்’ இந்தி படம் மூலம் பிரபலமான சரண்யா மல்கோத்ராவிடம் பேசி வருகிறார்கள். வித்யா பாலன் ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாரான ‘தி டர்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

தெலுங்கில் தயாரான என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்திலும் நடித்துள்ளார். அஜித்குமார் ஜோடியாக ‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக் மூலம் தமிழுக்கும் வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்ததும் சகுந்தலா தேவி வாழ்க்கை கதையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்