சிரஞ்சீவி படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு டைரக்டர் மரணம்

சிரஞ்சீவி படங்களை இயக்கிய, பிரபல தெலுங்கு டைரக்டர் மரணமடைந்தார்.

Update: 2019-02-13 21:59 GMT

பிரபல தெலுங்கு டைரக்டர் விஜயா பாப்பிநீடு (வயது 82). இவர் ஆந்திராவில் எழுத்தாளராக பணியை தொடங்கினார். சில நாவல்களையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு நாவல் ‘ஜகத் ஜடேலு’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அதன்பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்த ‘கேங் லீடர்’ படத்தை டைரக்டு செய்தார்.

இந்த படம் வெற்றிகரமாக ஓடி சிரஞ்சீவிக்கு திரையுலகில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிரஞ்சீவிக்கு மெகா ஸ்டார் என்ற பட்டத்தையும் இவரே வழங்கினார். சிரஞ்சீவியை வைத்து தொடர்ந்து ஏராளமான படங்களை டைரக்டு செய்தார். கில்லாடி நம்பர் 786, மஹாதீருடு படங்கள் பெரிய அளவில் வசூல் ஈட்டின.

விஜயா பாப்பிநீடுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.


மேலும் செய்திகள்