பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க தடை

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.

Update: 2019-02-18 10:23 GMT
மும்பை,

அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  "இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்