முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் : யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளம் ரூ.5 லட்சம்

வடிவேலு, சந்தானம் கதாநாயகர்கள் ஆனதால் அவர்களின் இடத்தை கெட்டியாக பிடித்து மளமளவென உயர்ந்துள்ள யோகிபாபு தமிழ் பட உலகின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி விட்டார்.

Update: 2019-05-01 23:30 GMT
யோகி பாபு கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்தார். சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் படங்களில் இவரது நகைச்சுவை பெரிய அளவில் ரசிக்கப்பட்டன.

பஞ்ச் வசனமும், அழகான தோற்றமும் காமெடிக்கு தேவை என்பதை உடைத்துள்ளார். இவரது வித்தியாசமான தலைமுடியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர். இப்போது 19 படங்கள் கைவசம் வைத்துள்ளார். யோகிபாபு கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்கள் காத்திருக்கிறார்கள்.

நயன்தாரா தனது படங்களில் யோகிபாபு இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறாராம். இப்போது ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். வடிவேலுவை நினைத்து எழுதிய கதாபாத்திரத்துக்கு இயக்குனர்கள் யோகிபாபுவை தேடுகிறார்கள். எல்லா படங்களிலும் ஒரேமாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனங்களும் உள்ளன.

தர்மபிரபு உள்ளிட்ட சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார். சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். ஒரு படத்துக்கு இவ்வளவு தொகை என்று வாங்கியதை நிறுத்திவிட்டு ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் நிர்ணயித்து உள்ளாராம். நிறைய தயாரிப்பாளர்கள் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் யோகிபாபுவிடம் கால்ஷீட் கேட்டு பணப்பெட்டியுடன் படையெடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்