அரசியலுக்கு வரும் ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-31 22:30 GMT

திரையுலகை பாலியல் புகாரால் பதற வைத்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சொன்னார். ஐதராபாத்தில் ஆடை அவிழ்ப்பு போராட்டமும் நடத்தினார். நடிகர் நானி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக தவறாக பயன்படுத்தி ஏமாற்றினார் என்றார்.

தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அவரது புகாரில் சிக்கினார்கள். ஐதராபாத்தில் மிரட்டல்கள் வருவதாக கூறி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது. ஸ்ரீரெட்டிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். இதனால் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்தை தடை செய்ய சதி நடப்பதாகவும் படக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். சமீப காலமாக நடிகைகள் பலர் அரசியலில் குதித்து எம்.பி, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வருகிறார்கள். ஸ்ரீரெட்டிக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.

அவர் தமிழக அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளது. தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சியொன்றில் விரைவில் இணைய இருக்கிறேன்” என்றார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்