என்னம்மா இப்படி பண்றீங்களேமா... அரைகுறை ஆடையில் பிரியங்கா சோப்ரா!

மேலாடை இன்றி அரைகுறை ஆடையில் பிரியங்கா சோப்ராவின் நடன வீடியோ வைரலாகி உள்ளது.

Update: 2019-06-06 12:19 GMT
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . 

சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

அவர்களின் புகைப்படங்கள் அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியாகி கேலிக்கும் , கிண்டலுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வகையில் உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, மேலாடை அணியாமல் கவர்ச்சியாக புடவை கட்டி வந்திருந்தார். அந்த நேரத்தில் போட்டோவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததோடு, கில்மாவாக குத்தாட்டம் ஒன்றையும் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மெகா வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்