சீதை வேடத்தில் நயன்தாரா? ரூ.1,500 கோடியில் படமாகும் ராமாயணம்

ராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர்.

Update: 2019-07-10 00:24 GMT
இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர் கூறியதாவது:-

“ராமாயணம் மிக சிறந்த காவியம் மட்டுமின்றி நமது கலாசாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த படத்தை மிகவும் பொறுப்போடு எடுக்கும் அவசியம் இருக்கிறது. பண விஷயத்தில் சமரசம் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சுதந்திரம் கொடுத்துள்ளனர். எனவே இந்த படத்தை கண்கொள்ளா காட்சியாக திரையில் காட்ட இருக்கி றோம்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021-ல் வெளியாகிறது.

மேலும் செய்திகள்