ஹிருத்திக் ரோ‌ஷன் படத்துக்கு வரி விலக்கு

ஹிருத்திக் ரோ‌ஷன் நடித்த சூப்பர் 30’ படத்துக்கு பீகார் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

Update: 2019-07-16 22:00 GMT
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கணித ஆசிரியர் ஆனந்த் குமார் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான சூப்பர் 30 என்ற இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனந்த் குமாருக்கு 37 வயது ஆகிறது. இவர் 2002–ல் இருந்து ‘சூப்பர் 30’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இதன் மூலம் ஆண்டுதோறும் பீகாரில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் 30 பேரை தேர்வு செய்து அவர்களை நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைத்து வருகிறார். ஒரு வருடத்துக்கான மாணவர்களின் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறார். 2010–ம் ஆண்டு வரை 212 மாணவர்களை ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் வெற்றி பெறச்செய்துள்ளார்.

இவரது வாழ்க்கை கதையே சூப்பர் 30 என்ற பெயரில் படமாகி உள்ளது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர், விரேந்திர சக்சேனா, நித்ஷ் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை விகாஸ் பால் இயக்கி உள்ளார். இவர் குயின் படத்தை எடுத்து பிரபலமானவர்.  இந்த படத்துக்கு வடமாநிலங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலும் குவிக்கிறது. இந்த நிலையில் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்தை சொல்லி இருப்பதால் ‘சூப்பர் 30’ படத்துக்கு பீகார் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

மேலும் செய்திகள்