‘சாஹோ’ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் புகார்

சமீப காலமாக சினிமாவில் கதை திருட்டுக்கள் அதிகம் நடப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

Update: 2019-09-03 23:30 GMT
பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சல்லி தனது கதையை திருடி ‘சாஹோ’ படத்தை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த படத்தில் பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் 4 நாட்களில் ரூ.350 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்த படம் திரைக்கு வந்ததும் ஜெரோம் சல்லி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று பதிவிட்டார். அதன் அர்த்தம் புரியவில்லை என்று ரசிகர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து மீண்டும் டுவிட்டர் பக்கத்தில், “நான் இயக்கிய ‘லார்கோ வின்ச்’ படத்தை தழுவி எடுத்துள்ளனர். ஆனால் படம் மோசமாக உள்ளது. தயவு செய்து என் கதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்” என்று கூறியுள்ளார். ஜெரோம் சல்லி இயக்கிய லார்கோ வின்ச் படம் 2008-ல் பிரெஞ்சு மொழியில் வெளியானது. ஏற்கனவே கடந்த ஆண்டு பவன் கல்யாண் இயக்கத்தில் வெளியான அஞ்ஞாதவாசி படமும் தனது கதை என்று ஜெரோம் சல்லி கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்