வீர தீர சூரன்: மதுரையில் படப்பிடிப்பை பார்க்க குவிந்த பொதுமக்கள்

வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-29 07:19 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் (பாகம்-2) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்