கதை, தலைப்பை மாற்ற சொல்லி திரைக்கு வரும் படங்களை தடுப்பதா? வித்யா பாலன் ஆவேசம்

அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான வித்யாபாலன் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

Update: 2019-10-06 23:32 GMT
வித்யாபாலன் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நான் நடித்த ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ மைல்கல் படங்களாக அமைந்தன. அந்த கதைகளை தேர்வு செய்ததில் சுதந்திரமாக செயல்பட்டேன். இந்த மாதிரி படங்களில் நடிக்கிறியே என்று விமர்சனங்களும் எழுந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

மொழி எல்லைகளை தாண்டி நடிப்பதற்கு என் தைரியம்தான் காரணம். கதைகள் தேர்வில் துணிச்சலாக சுதந்திரமாக செயல்படுகிறேன். நான் நடிக்கும் எல்லா படங்களும் சிலருக்கு பிடிக்கலாம் இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பிடிக்காதவர்கள் எனது படங்களை பார்க்க வேண்டாம்.

சினிமா துறையில் இருப்பவர்கள் எந்த மாதிரி கதைகளிலும் நடிக்கலாம். அது அவர்கள் உரிமை. படங்கள் பிடிக்காதவர்கள் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். எந்த படமாக இருந்தாலும் ரிலீசாகாமல் தடுக்கிற நிலைமை இருக்க கூடாது. படங்களை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம். பெயரை மாற்ற வேண்டும். கதையை மாற்றனும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

நான் நடித்த ஒவ்வொரு படமும் என் மனதுக்கு நெருக்கமானவை. எனக்கு பிடித்த படங்களில் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது.”

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

மேலும் செய்திகள்