‘கோல்டன் குளோப்’ விருதுக்கு பார்த்திபன் படம் தேர்வாகுமா?

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது.

Update: 2019-10-22 22:44 GMT
பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

தற்போது புதிய முயற்சியாக பார்த்திபன் மட்டுமே நடித்துள்ள ஒத்த செருப்பு படம் வெளிவந்துள்ளது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார்.

இந்த படத்தை திரையுலகினர் பாராட்டினர். நடிகர் கமல்ஹாசனும் வீடியோவில் படத்தை பாராட்டி இருந்தார். மேலும் அவர் கூறும்போது, “புதிய பாதை படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் அழைத்தனர். ஆனால் கால்ஷீட் இல்லாததால் நடிக்க இயலவில்லை. அதற்காக நான் வருந்தவில்லை. அதில் நடித்து இருந்தால் தமிழ் பட உலகுக்கு சிறந்த நடிகரான பார்த்திபன் கிடைக்காமல் போய் இருக்கலாம் என்றார்.

ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்த பெரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்