மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கதை; தனுசின் புதிய படம் ‘கர்ணன்’

தனுஷ் நடித்து கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் அசுரன் படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தனுஷ் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.

Update: 2020-01-06 23:30 GMT
அசுரன்  படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கின்றனர். அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்துள்ள பட்டாஸ் படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதில் கதாநாயகியாக மெஹ்ரீன் மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு சுருளி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால் படக்குழுவினர் மறுத்தனர். படத்துக்கு தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

அடுத்து பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் வெற்றி படத்தை டைரக்டு செய்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைத்து இருப்பதாக தாணு சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார். “கர்ணன் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல. வெற்றியையும் தருபவர்” என்றும் பதிவிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி உள்ளது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையம்சம் கொண்ட படமாக இது தயா ரா கிறது. இந்த படத்துக்கும் அசுரனைபோல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்