அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!

``ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சந்தானம். அவருடைய திறமை, `மன்மதன்' படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தது. ஒரேநாளில் அவர் நகைச்சுவை நடிப்பில் உச்சத்தை அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார்.

Update: 2020-03-13 03:30 GMT
சந்தானத்துக்காக பெரிய பெரிய கதாநாயகர்கள் காத்திருந்தார்கள். `நம்பர் 1' நகைச்சுவை நடிகராக இருந்தபோதே அவர் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இன்று பல நடிகர்கள் ஆச்சரியப்படும் இடத்தில் இருக்கிறார்'' என்று அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட அதிபர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

``இந்த வருடம் சந்தானத்துக்கு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவர் கதாநாயகனாக ஒப்புக்கொண்ட படங்களை பார்க்கும்போது தெரிகிறது. விஜய் சேதுபதிதான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு பேச்சு, தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதை சந்தானம் முறியடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியை விட, சந்தானம் அதிக படங்களில் நடிக்கிறார்.

`டகால்டி' படத்தை தொடர்ந்து, சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் வளர்ந்து வருகின்றன. இதையடுத்து, `ஏ 1' படத்தை இயக்கிய ஜான்சன் டைரக்‌ஷனில் ஒரு படத்திலும், ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் ஒரு படத்திலும் `வஞ்சகர் உலகம்' படத்தை தயாரித்த நிறுவனம் புதிதாக தயாரிக்கும் படத்திலும் சந்தானம் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.''

மேலும் செய்திகள்