நான் வைத்த விருந்தில் கொரோனா பரவியதா? வதந்திகளை பரப்ப வேண்டாம் - பாலிவுட் பாடகி கனிகா கபூர்

நான் வைத்த விருந்தில் கொரோனா பரவியதா? வதந்திகளை பரப்ப வேண்டாம் என பாலிவுட் பாடகி கனிகா கபூர் கூறியுள்ளார்.

Update: 2020-04-27 12:21 GMT
மும்பை,

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சென்று திரும்பினார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின.தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு விருந்தில், எம்.பி.க்கள், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உத்தரபிரதேச மாநில சுகாதார மந்திரி ஜெய்பிரதாப் சிங் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.இதற்கிடையே, கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த மாதம் 20-ந் தேதி, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதிகள் அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டியதாகி விட்டது. அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் முதலில் கனிகா கபூர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. கண்டிப்பு காட்டிய பிறகே அவர் ஒத்துழைப்பு வழங்கினார். மேலும், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு 
அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கனிகா கபூர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து  தொடர்ந்து 2 பரிசோதனைகளுக்கு பிறகு கனிகா கபூர் குணம் அடைந்தார். கொரோனா வைரசுக்கு 17 நாட்களாக 
சிகிச்சை பெற்ற கனிகா கபூர் குணமடைந்தார். அவர் கடந்த 6-ம் தேதி வீடு திரும்பினார். 

இந்நிலையில் கனிகா கபூர் இது பற்றி தற்போது மவுனம் கலைத்துள்ளார். அதில் அவர் நான் மும்பையிலிருந்து திரும்பிய பிறகு எனக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதித்த பின்னர் நான் தனிமையில் இருக்க வேண்டும் என்று எதுவும் கூறாததால் நானும் அப்படி இருக்கவில்லை.

எனினும் மூன்று நாட்கள் கழித்து எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டபோதே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதற்கு இடையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய உணவு மற்றும் விருந்துக்கு சென்றிருந்தேன். இதை 

தான் பார்ட்டி என்று கூறுகின்றனர். இதில் எதிலுமே உண்மை இல்லை அதுவும் இல்லாமல் என்னிடம் தொடர்பு கொண்டவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட போது ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. எனவே நான் அமைதியாக இருப்பதைக் காரணம் காட்டி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்