இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை ஏன் பெறவில்லை? அமிதாப்பச்சன் பதில்

இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை ஏன் பெறவில்லை? என ரசிகர் கேள்விக்கு அமிதாப்பச்சன் பதில் அளித்துள்ளார்.

Update: 2020-04-29 07:39 GMT
மும்பை,

கொரோனா  பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். 

அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பல முன்னணி நடிகைகள் கிளாமர் புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள் என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது பாலோயர்களை அதிகரித்துக் கொள்கிறார்கள். 

'பிகினி' புகைப்படங்கள் குறித்து அமிதாப்பச்சன் ஒரு கருத்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்ஸ்டாகிராமில் நான் ஏன் இளம் தலைமுறையினரைப் போல, அதிகமான பாலோயர்களைப் பெறவில்லை என ஒருவர் என்னிடம் விளக்கம் கேட்டார். அதற்கு நான் பிகினி புகைப்படங்களை பதிவிடுவதில்லை என்பது தான் காரணமாம். அதனால், இந்த புகைப்படத்தைப் பதிவிடுகிறேன். இது ஒரு உண்மையான பிகினி புகைப்படமல்ல. என்னுடைய 'மகான்' படத்தில் இடம் பெற்ற ஒரு புகைப்படம். அப்படம் வெளிவந்து இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்