பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலி காரணமாக பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-05-06 11:20 GMT
சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா. 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிவாஜி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இருப்பினும் அவரின் உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. 

சிவாஜியின் நண்பர் சுரேஷ் கூறியதாவது,

சிவாஜியின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்றார்.

மகேஷ் பாபுவின் முராரி, ஸ்ரீமாந்துடு ஆகிய படங்களில் சிவாஜி ராஜாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிவாஜி ஒக்கடே, பெல்லி சந்ததி, தேவுடு, சமுத்திரம், ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ், வினோதம், சம்பங்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் சங்கமான மாவின் தலைவராகவும் சிவாஜி ராஜா இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்