பழம்பெரும் மலையாள நடிகர் மரணம்

பழம்பெரும் மலையாள நடிகர் பாப்புக்குட்டி பாகவதர். இவர் ஏராளமான பாடல்களையும் பாடி உள்ளார்.

Update: 2020-06-23 23:01 GMT

பழம்பெரும் மலையாள நடிகர் பாப்புக்குட்டி பாகவதர். இவர் ஏராளமான பாடல்களையும் பாடி உள்ளார். கொச்சி அருகில் உள்ள பல்லுக்குட்டியில் வசித்து வந்த இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைவு எற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 107. 

பாப்புக்குட்டி பாகவதர் பிரசன்னா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1950-ல் வெளியானது. இதில் பாடலும் பாடி இருந்தார். ஸ்ரீ குருவாயூரப்பன், ஷியாமாளா சேச்சி, முதலாளி, அஞ்சு சுந்தரிகள் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல பாடகர் யேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப்புடன் இணைந்து நாடகங்களிலும் நடித்துள்ளார்.

பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடி இருக்கிறார். இவர் பாடிய பல பாடல்கள் கேரளாவில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. தனது 75 வயதில் மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற மலையாள படத்தில் சங்கர் மகாதேவன், ரிமி டோமி ஆகியோருடன் இணைந்து பாடிய பாடலும் வரவேற்பை பெற்றது. பிரபல மலையாள நடிகர் கோகன் ஜோஸ் இவரது மகன் ஆவார். பாப்புக்குட்டி பாகவதர் மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்