பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

பழம்பெரும் நடிகை ஜெயந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-07-09 06:21 GMT
பழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்தி. இவர் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். 1960-ல் வெளியான யானை பாகன் படத்தில் அறிமுகமாகி இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், வீராதி வீரன், நீர்குமுழி, முகராசி, பாமா விஜயம், எதிர்நீச்சல், இருகோடுகள், உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 75 வயது ஆகிறது. பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஜெயந்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்