இயக்குனர்களுக்கு இசைஞானம் வேண்டும்; ஏ.ஆர்.ரகுமான்

இயக்குனர்களுக்கு இசைஞானம் வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

Update: 2020-09-30 00:32 GMT
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சினிமா வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“சினிமாவில் கதைக்களங்கள் மாறி விட்டன. அவற்றில் இடம்பெறும் பாடல்களும் குறைந்து இருக்கிறது. இசை என்பது தண்ணீர் மாதிரி. காலத்துக்கு ஏற்ப அது மாறியபடி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். உலகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சினிமா இயக்குனர்களும் இசை ஞானத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி செய்தால்தான் இசை சம்பந்தமான சிறந்த படங்களை அவர்களால் எடுக்க முடியும். நுணுக்கமான விஷயங்களை அதிகமாக புகுத்துவதும் சரியல்ல. நான் கடந்த சில வருடங்களாக இசை பற்றிய ஆய்வு செய்து ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்தை தயாரித்து இருக்கிறேன். அதை திரைக்கு கொண்டுவர காத்திருக்கிறேன். அந்த படம் வெளியான பிறகே மேலும் பல புதிய விஷயங்களில் ஈடுபடுவேன்.”  இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்