பட அதிபர் சங்க தேர்தல்: டி.ராஜேந்தர், முரளி அணி வேட்பாளர்கள் அறிமுகம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

Update: 2020-10-29 22:49 GMT
தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ராமசாமி என்ற முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். டி.ராஜேந்தரின் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் செயலாளர் பதவிக்கு டி.மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், துணைத்தலைவர் பதவிக்கு கே.முருகன், பி.டி.செல்வகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏ.எம்.ரத்னம், என்.பிரபாகரன், அசோக் சாம்ராஜ், மனோஜ்குமார், மனோபாலா, ஷக்தி சிதம்பரம், எம்.திருமலை, சரவணன், டி.டி.ராஜா, ரிஷிராஜ், ஸ்ரீதர், செந்தில் குமார், ஜான்மேக்ஸ், பாபுகணேஷ், கே.ஜி.பாண்டியன், இசக்கிராஜா, மதுரை செல்வம், ராஜா, பிரபாதிஷ் சாம்ஸ், திருக்கடல் உதயம், ஆர்.சந்திரசேகர் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

டி.ராஜேந்தர் பேசும்போது, “தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடுவோம். உள்ளாட்சி கேளிக்கை வரியை நீக்க முதல்வருக்கும் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய பிரதமருக்கும் கோரிக்கை வைப்போம். சிறு தயாரிப்பாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்போம். வி.பி.எப் கட்டணத்தை ரத்து செய்ய போராடுவோம். எஸ்.ஏ.சந்திரசேகர், தாணு, முரளிதரன், ஆர்.பி.சவுத்ரி, கமீலா நாசர், ஏ.எல்.அழகப்பன், கேயார் போன்றோரை இணைத்து உயர்மட்ட ஆலோசனை குழு அமைப்போம்” என்றார்.

முரளியின் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் துணைத்தலைவர்களாக போட்டியிடும் சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்களாக போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ், பொருளாளராக போட்டியிடும் எஸ்.சந்திர பிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் அழகன் தமிழ்மணி, ஆர்.மாதேஷ், கே.பாலு, ஆர்.வி.உதயகுமார், விஜயமுரளி, சவுந்தரபாண்டியன், கே.கே.ராஜ்சிற்பி, வி.பழனிவேல், ஏ.எல்.உதயா, ஜி.எம்.டேவிட் ராஜ், ராஜேஸ்வரி வேந்தன், எம்.எஸ்.சரவணன், எஸ்.தணிகைவேல், டி.தங்கம் சேகர், எஸ்.வி.ஜெயப்பிரகாஷ், சி.மணிகண்டன், ஜெ.சுரேஷ், ஜெ.சண்முகம், எஸ்.ராமச்சந்திரன், ஏ.முருகன், முத்து ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்த அணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “25 வருடம் சந்தா கட்டிய நிறுவனங்களுக்கு ஆயுள் உறுப்பினர் தகுதி, மருத்துவ காப்பீடு வசதி, வி.பி.எப் கட்டணம் ரத்து, விகிதாசார முறையில் படங்கள் திரையிடல், ஆன்-லைன் டிக்கெட் சேவை கட்டணத்தில் பங்கு, தயாரிப்பாளர்களுக்கு பையனூரில் வீடுகள். சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு உதவி உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்று உள்ளன.

மேலும் செய்திகள்