‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’, ‘அந்த்ரங்கிரே’ திரைக்கு வர தயார் நிலையில் தனுஷ் நடித்த 3 படங்கள்

தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ், 3 புதிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த 3 படங்கள்: ஜகமே தந்திரம், கர்ணன், அந்த்ரங்கிரே (இந்தி)

Update: 2021-01-21 23:30 GMT
இதில், ‘ஜகமே தந்திரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்து இருக்கிறார். சஞ்சனா நடராஜன் என்ற இன்னொரு கதாநாயகியும் படத்தில் இருக்கிறார். ஒய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்து இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

‘கர்ணன்’ படத்தை மாரிசெல்வராஜ் டைரக்டு செய்ய, எஸ்.தாணு தயாரித்துள்ளார். கதாநாயகி, ரெஜினா விஜயன்.

‘அந்த்ரங்கிரே’ (இந்தி) படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்து இருக்கிறார். இவர், ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர்.

இந்த 3 படங்களின் படப்பிடிப்புகளும் முடி வடைந்தன. தனுஷ் இப்போது, டி.ஜி.தியாகராஜனின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், ஸ்முர்தி வெங்கட் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

இதையடுத்து தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற புதிய படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்குகிறார்.

மேலும் செய்திகள்