ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் நிவாஸ் மரணம்

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக நிவாசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2021-02-02 02:19 GMT
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த பி.எஸ்.நிவாஸ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதுமை காரணமாக நிவாசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

பி.எஸ்.நிவாஸ் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 16 வயதினிலே மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது. ரஜினிகாந்தின் தனிக்காட்டு ராஜா, கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள், சலங்கை ஒலி, பாக்யராஜின் புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், கோழிகூவுது, ஊரு விட்டு ஊரு வந்து உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம் படத்தை டைரக்டு செய்து ஒளிப்பதிவும் செய்தார். மேலும் தமிழில் எனக்காக காத்திரு, நிழல் தேடும் நிஜங்கள், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மோகினி ஆட்டம் என்ற மலையாள படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார். பி.எஸ்.நிவாஸ் மறைவுக்கு தமிழ், மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்