நயன்தாராவின் நெற்றிக்கண் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-26 01:13 GMT
இன்று (26-ந்தேதி) முதல் அனைத்து திரையரங்குகளை மூடவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே திரைக்கு வர தயாராக இருந்த சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி உள்ளிட்ட பல புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது தியேட்டர்கள் மூடப்படுவதை தொடர்ந்து படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். இதில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். பார்வை இழந்த நிலையிலும் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் உருவாகி உள்ளது. இதுபோல் விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ள ராங்கி படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கின்றன. 

ஏற்கனவே நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

மேலும் செய்திகள்