'மாநாடு' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

Update: 2021-10-02 10:03 GMT
சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில்  யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்  சிம்பு நடித்துள்ள படம்   ‘மாநாடு’. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா,  எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மாநாடு' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரண்டு நிமிடம் 9 வினாடிகள் நீளம் ஓடக்கூடிய இந்த டிரைலரை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் நிவின் பாலி, ரக்‌ஷித் ஷெட்டி மற்றும்  நானி உள்ளிட்டோர் டுவிட்டரில் வெளியிட்டனர்.

மேலும் செய்திகள்