பிரபாசின் 25-வது படம்

பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.

Update: 2021-10-07 16:43 GMT
பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் படங்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.பிரபாஸ் நடிக்கும் படங்களை அதிக பட்ஜெட்டிலும் எடுக்கின்றனர். சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார். தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ராதே ஷியாம், சலார், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவையும் கைவசம் உள்ளன.

அடுத்து பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் தயாராக உள்ளது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் மற்றும் இதர நடிகர்-நடிகைகள் விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்