வடிவேலு ரீ என்ட்ரி: புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ..

நடிகர் வடிவேலுவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடபட்டுள்ளது.

Update: 2021-10-08 13:00 GMT
சென்னை 

நடிகர் வடிவேலு  இயக்குனர் சுராஜ் இயக்கத்தில்  புதிய  படம் ஒன்றில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது .

 இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு  வெளியாகி உள்ளது. அதன்படி வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு  ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும்  வெளியிடபட்டுள்ளது.

 .

மேலும் செய்திகள்