‘பீஸ்ட்' படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும பீஸ்ட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Update: 2021-11-15 11:49 GMT
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பின்னர் சென்னையில் வணிக வளாக அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். இந்த நிலையில் மீண்டும் ஜார்ஜியாவில் சில காட்சிகளை படமாக்க விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் செல்ல இருக்கிறார்கள். ஜார்ஜியாவில் காஷ்மீர் போன்று அரங்குகள் அமைத்து ராணுவம் தொடர்பான காட்சிகளைப் படமாக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

படத்தில் விஜய் கதாபாத்திரத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் அவர் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிபடுத்தவில்லை. ஏற்கனவே விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்த துப்பாக்கி படம் பெரிய வெற்றி பெற்றது. பீஸ்ட் படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்