முதல் முறையாக முத்தக்காட்சியில் அனுபமா

கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் இப்போது பட வாய்ப்புகளுக்காக அதுபோன்று நடிக்க சம்மதிக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இணைந்துள்ளார்.

Update: 2022-01-11 08:53 GMT
இவர் தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தள்ளிப்போகாதே படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். திரிவிக்ரம் இயக்கத்தில் வந்த அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தா முதல் கதாநாயகியாகவும், அனுபமா பரமேஸ்வரன் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தனர். ஆனாலும் சமந்தாவைவிட சிறப்பாக நடித்ததாக அனுபமா பெயர் வாங்கினார். அதன் பிறகு தனக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட படவாய்ப்புகளை கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் நிராகரித்தார்.

தற்போது பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் கதாநாயகனாக நடிக்கும் ரவுடி பாய்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இந்த படத்தின் டிரெய்லரில் அனுபமாவின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. இதுவரை கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறி வந்த அனுபமா முதல் முறையாக இப்படி நடித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்