சொகுசு கார் வாங்கி தந்தையின் கனவை நிறைவேற்றிய சாக்‌ஷி அகர்வால்..!

தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் சொகுசு கார் வாங்கியுள்ளார்.

Update: 2022-01-28 23:12 GMT
சென்னை,

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்கள் படங்கள் வெளியானது. 

சமீபத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும் போது, சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது எனது தந்தையின் 45 வருட கனவாக இருந்தது. அவரது கனவை நிறைவேற்றும் விதமாகவே மெர்சிடிஸ் பென்ஸ் இ வகுப்பு காரினை வாங்கியுள்ளேன். இது என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்’ என்று கூறினார்.

மேலும் ஒரு நடிகையாக, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த கனவுகளை நம்புவதற்கு தன்னுடைய இந்த வெற்றி உதவும் எனவும், தன்னால் இதைச் செய்ய முடிந்தால் நிச்சயம் ஒவ்வொருவராலும் இது முடியும் என்றும் சாக்‌ஷி அகர்வால் கூறியுள்ளார்.

சாக்‌ஷி தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் பகீரா, சமுத்திரக்கனியுடன் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்