குறைந்த வயது நடிகையுடன் ரஜினிகாந்த் ஜோடி சேர தயக்கம்?

ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 169-வது படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Update: 2022-02-25 06:05 GMT
40 வயதுக்கு குறைந்த நடிகைகளுடன் ஜோடி சேர ரஜினிகாந்த் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. யாரை ஜோடியாக நடிக்க வைக்கலாம்? என்று அவரிடமே கேட்கப்பட்டதாம். ‘‘ஐஸ்வர்யா ராயை கேட்டுப் பாருங்கள்’’ என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

`ஐஸ்வர்யா ராய் ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார். மற்ற கதாநாயகிகளுக்கு இவ்வளவு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை' என்று தயாரிப்பு நிறுவனம் தயங்குகிறதாம். ரஜினிகாந்தின் 169-வது படத்தின் கதாநாயகி வேட்டை தொடர்கிறது.

மேலும் செய்திகள்