பொன்னியின் செல்வனில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வனில் விடுபட்ட சில காட்சிகளை மீண்டும் படமாக்க மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்று அங்கு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.;

Update:2022-03-17 15:41 IST
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் சினிமா படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளனர். இதில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பை தாய்லாந்து காடுகளில் நடத்தினர். தொடர்ந்து சென்னை, புதுச்சேரி, ஐதராபாத் மற்றும் வட மாநிலங்களில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இறுதி கட்டமாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பை நடத்தி முழு படப்பிடிப்பும் முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.

தற்போது ஸ்டூடியோக்களில் கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வனில் விடுபட்ட சில காட்சிகளை மீண்டும் படமாக்க மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்று அங்கு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்