சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீடு
இப்படத்திற்கு 'தாய் கிழவி' எனப்பெயரிடப்பட்டுள்ளது;
சென்னை,
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறது. அப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு ‘தாய் கிழவி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிறுவனம் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளது. ‘தாய் கிழவி’ 9-வது படமாகும்.