ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள்

வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கி பண்டிகையை கொண்டாடினார்கள்.;

Update:2022-10-17 15:34 IST

தமிழில் பல படங்களில் கதாநாயகிகளாக நடித்துள்ள வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் ஆகியோர் சென்னை தியாகராய நகரில் 1650 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கி பண்டிகையை கொண்டாடினார்கள். இதில் டைரக்டர் கிருத்திகா உதய நிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆதரவற்ற குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் போன்றவற்றை அவர்கள் வழங்கினார்கள்.

குழந்தைகளுடன் நடனம் ஆடியும் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர். அவர்களுக்கு மதிய உணவும் வழங்கினர். ஆதரவற்ற குழந்தைகளுடன் பண்டிகையை கொண்டாடியது அற்புதமான நிகழ்வு என்று நடிகைகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்