மீண்டும் நடிக்கும் அனுஷ்கா

தெலுங்கு நடிகர் நிவின் பாலிஷெட்டியுடன் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

Update: 2022-11-09 01:05 GMT

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்காவுக்கு சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி நடித்தார். பிறகு கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடையை குறைக்க முடியவில்லை. இதனாலேயே அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்கினர். கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் ஜோடி போட விரும்பவில்லை. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நிசப்தம் படம் 2020 அக்டோபர் மாதம் வெளியானது. அதன்பிறகு வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நிவின் பாலிஷெட்டியுடன் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த படத்தில் சமையல் கலைஞராக தோன்றும் அனுஷ்காவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது அனுஷ்காவுக்கு 48-வது படம். இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்