பெரிய ஹீரோ என்றாலும் படத்திற்கு பிரமாண்டமான புரமோஷன் தேவைப்படுகிறது - இயக்குநர் ஹரி

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான் என்று ‘ரத்னம்’ பட புரமோஷன் பணியின்போது இயக்குநர் ஹரி கூறினார்.

Update: 2024-04-04 10:52 GMT

'தாமிரபரணி', 'பூஜை' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக 'ரத்னம்' படம் மூலம் இணைந்துள்ளார் விஷால். ஏப்ரல் 26-ம் தேதி 'ரத்னம்' வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஹரி 'ரத்னம்' படம் குறித்து பேசினார். "நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் 40 சதவீதம் பேர்தான் நல்லவர்கள். மீதம் இருக்கும் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான். அந்த நல்லவர்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன் தான் 'ரத்னம்'. நம்முடைய வலியைப் போக்குபவன் தான் ஹீரோ. அப்படியான ரத்னம் போன்ற ஆட்களை சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும்; நிஜத்தில் இல்லை. 'சாமி', 'சிங்கம்' படங்களில் எந்த அளவுக்கு நீங்கள் ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.

இப்போது என்னதான் பெரிய ஹீரோ, இயக்குநர் என்றாலும் படத்திற்கு புரமோஷன் பெரிய அளவில் தேவைப்படுகிறது. 'நான் பெரிய ஆளு!' என்ற நினைப்பில் உட்கார்ந்திருந்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள்" என்று சொன்னார் ஹரி.

Tags:    

மேலும் செய்திகள்