'கோப்ரா' படத்தின் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கோப்ரா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

Update: 2022-06-15 23:47 GMT

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

அதன்படி, 'கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்