கவின், அபர்ணாவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய தனுஷ்

'டாடா' படத்தை பார்த்த நடிகர் தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

Update: 2023-02-22 08:46 GMT

சென்னை,

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டாடா படத்தை பார்த்த நடிகர் தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். தனுஷ் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்