ஆடியன்ஸை மதித்து 'ரத்னம்' திரைப்படம் எடுத்துள்ளோம் - இயக்குநர் ஹரி

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் எமோஷனிலும் அசத்தியுள்ளார் என்று இயக்குநர் ஹரி கூறினார்.

Update: 2024-04-20 15:36 GMT

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முரளி சர்மா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

இயக்குநர் ஹரி "இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார், அந்த கம்பெனியில் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார், ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படம் இந்தக்கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வலையில் 60 சதவிகிதம் ஆக்சன் 40 சதவிகிதம் கமர்ஷியலாக இருக்கும்.

விஷால் ஆக்சன் செய்வார், ஆனால் எமோஷனிலும் அசத்தியுள்ளார். எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். எனக்கு எதார்த்தம் இருக்கனும்னு ஆசைப்படுவேன், ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது. அந்த எண்ணத்தில் தான் உழைத்து உருவாக்கியுள்ளோம். 3.5 கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்சன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்