"போதைப் பொருட்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" - நடிகர் கார்த்தி

போதைப் பழக்கம் இன்று பள்ளி வரை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-11 13:56 GMT

சென்னை,

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"போதைப் பழக்கம் இன்று பள்ளி வரை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. மதுபானம், சிகரெட் உள்ளிட்டவற்றை அவற்றின் வாசம் மூலம் தெரிந்து கொள்ளலாம், ஆனால் சில போதைப் பொருட்களின் வாசம் கூட தெரிவதில்லை.

சில இடங்களில் போதைப் பொருள் என்பதே தெரியாமல் அவற்றை சிலர் விற்பனையும் செய்து வருகின்றனர். அவற்றுக்கு பல பெயர்களையும் சொல்கிறார்கள். குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்