நடிகர் விஜய்யை சந்தித்த 'ஹிட் லிஸ்ட்' படக்குழு - வீடியோ வைரல்

'ஹிட் லிஸ்ட்' படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது.

Update: 2024-05-26 03:55 GMT

சென்னை,

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் வரும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளன.

இந்நிலையில், 'ஹிட் லிஸ்ட்' படக்குழு நடிகர் விஜய்யை சந்தித்துள்ளது. மேலும், படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது. இது குறித்தான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்