ஜெயம் ரவி படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
image courtecy:twitter@RedGiantMovies_
சென்னை,
வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யாமேனன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, யோகிபாபு, வினய் ராய், லால் என்கிற எம்.பி. மைக்கில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.