'கல்கி 2898 ஏடி' படத்தின் சூப்பர் ஸ்பெஷல் காரை ஓட்டிய நாக சைதன்யா

'கல்கி 2898 ஏ.டி’ படத்திற்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி காரை ஓட்டிப் பார்த்து குஷியாகியுள்ளார் நடிகர் நாக சைதன்யா. இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-27 05:21 GMT

ஹைதராபாத்,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. போலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.


இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

கல்கி 2898 ஏ.டி, படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில், 2020 -ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - 'கல்கி 2898 ஏ.டி' படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' அறிமுகப்படுத்தப்பட்டது. பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை - நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன், 'லவ் யூ, புஜ்ஜி' என்று பிரம்மாண்டமான நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

புஜ்ஜி காரை நடிகர் நாகசைதன்யா ஸ்பெஷலாக ஓட்டிப் பார்த்துள்ளார். காரின் வடிவமைப்பை பார்த்து ஆச்சரியப்பட்ட நாக சைதன்யா, 'அனைத்து இன்ஜினியர்களின் ரூலையும் பிரேக் செய்து விட்டீர்கள்' என பாராட்டிக் கொண்டே இந்த காரை ஓட்டிப் பார்த்திருக்கிறார். காரில் பயணித்த அனுபவம் அவருக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் 'கல்கி 2898 ஏ.டி' இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்