சூர்யாவின் 47வது படம்.. பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் சூர்யா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார்.;

Update:2025-12-08 09:39 IST

சென்னை,

‘ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது ‘கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆவேசம்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார். இது அவரது 47-வது படம் ஆகும். புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று சென்னையில் தொடங்கியது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ‘திருமணம் என்னும் நிக்காஹ்' படத்துக்கு பிறகு, அதாவது 11 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா நடிக்கும் தமிழ் படம் இதுவாகும். மேலும் நஸ்லென், ஜான் விஜய் ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ழகரம் ஸ்டுடியோ சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார்.

‘‘இந்தப் படத்தை இளைஞர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். சூர்யாவை இதுவரை பார்க்காத ‘எனர்ஜி'மிக்க கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்ப்பது உறுதி’’, என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்த புதிய படத்தின் இதர ‘அப்டேட்'கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்