கங்கனாவின் 'எமர்ஜென்சி' திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் எமர்ஜென்சி.

Update: 2024-01-23 07:48 GMT

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் 'எமர்ஜென்சி' திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி எல்லா காலத்திலும் மிகவும் பரபரப்பான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் என படக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்