கதிர், திவ்ய பாரதி நடிக்கும் படத்துக்கு அஜித் படத்தின் டைட்டில்..!

நடிகர் கதிர் மற்றும் திவ்ய பாரதி இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-09-22 08:56 GMT

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'இஷ்க்'. தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை 'ஜீரோ' புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 1995-ம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் சுவலஷ்மி நடிப்பில் வெளியான 'ஆசை' படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

பர்ஸ்ட்லுக் போஸ்டரில் கதிர் மற்றும் திவ்யபாரதி இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடுவது போல் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்