ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாகும் கே.ஜி.எஃப். திரைப்படம்

கே.ஜி.எஃப். படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2023-07-11 22:38 IST

பெங்களூரு,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப். சாப்டர்-1 திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 250 கோடி ரூபாய் வரை வசூலித்ததோடு, கன்னட திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர்-2 திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் மாபெரும் வெற்றியை பெற்றது. சர்வதேச அளவில் இந்த படம் சுமார் 1,200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. தொடர்ந்து இந்த படத்தின் 3-ம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற கே.ஜி.எஃப். படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் யஷ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்