50-வது நாளில் அடியெடுத்து வைத்த 'மாமன்னன்' படம்: தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்

50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய தமிழ் மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-08-17 13:59 GMT

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' திரைப்படம் கடந்த ஜூலை 27-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய தமிழ் மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமான 50 ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. சமூகநீதி - சமத்துவ அரசியலை பேசிய மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்